ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் லடாக், லட்சட்தீவுகள் சேர்க்கப்பட்டதையடுத்து 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த பயனாளிகள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் பெறலாம்
ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் ஆய்வு செய்தார். இத்திட்டத்தில் லடாக் மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றை இணைக்க அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஒப்புதல் அளித்தார்.
இந்த 2 யூனியன் பிரதேசங்களும், ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணையும் பரிசோதனைகளை நிறைவு செய்துவிட்டன. இத்துடன் மொத்தம் 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணைந்துள்ளன.
ஆந்திரா, பீகார், தத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், லட்சத் தீவு, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் தற்போது உள்ளன.
இதன் மூலம் பொது விநியோக திட்டத்தில் உள்ள புலம் பெயரும் பயனாளிகள் 26 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும், இன்று முதல் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago