இராக்கில் ஓராண்டுக்கு முன்னர் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற 39 இந்தியர்கள் உயிருடன் உள்ளனர்: மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

By ஏஎன்ஐ

‘‘இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ள 39 இந்தியர்கள் உயிருடன் உள்ளனர். அவர் களை மீட்க தீவிர முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது’’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது.

இராக்கின் மொசூல் நகரில் கட்டு மானப் பணியில் ஈடுபட்டிருந்த 39 இந்தியர்களை, ஐஎஸ் தீவிர வாதிகள் பிடித்து சென்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பலவழிகளில் முயற்சி செய்தது. எனினும், அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்து ஓராண் டுக்கு மேல் ஆகிறது. இந்தியர் களின் கதி என்னவென்று தெரி யாமல் இருந்தது. இந்நிலையில், அவர்கள் உயிருடன் இருக் கின்றனர் என்று மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விகாஸ் ஸ்வரூப் மேலும் கூறியதாவது: பாலஸ்தீன அதிபர் மமூத் அப்பாஸை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது, இராக் மற்றும் லிபியாவில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து கேட்டார். மேலும், தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற இந்தியர்கள் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் அப்பாஸிடம் மோடி வேண்டு கோள் விடுத்தார்.

அதற்கு அதிபர் அப்பாஸ் பதில் அளிக்கையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவல் கிடைத்தாலும் உடனடியாக இந்தியாவுக்கு தெரிவிக்கிறேன் என்று உறுதி அளித்தார். அப்பாஸ் மேலும் கூறுகையில், ‘39 இந்தியர்கள் தற்போது உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது’ என்றார். அவர் களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்