மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனது இரங்கல் செய்தியில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறும்போது உலகச் சவால்களை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து எதிர்கொள்ளும் என்று முகர்ஜி ஆழமாக நம்பிக்கை கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களும் அமைப்புகளும் முகர்ஜியின் மரணத்துக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் அரசியல்வாதிகள், நிபுணர்களில் ஒரு தனித்துவமான ஆளுமை பிரணாப் என்று புகழ்ந்துள்ளனர்.
84 வயது பிரணாப் முகர்ஜி திங்கள் மாலை மாரடைப்பினால் காலமானார். 21 நாட்கள் அவர் பல நோய்களில் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜோ பிடன், தன் இரங்கல் செய்தியில், “ஸ்ரீ பிரணாப் முகர்ஜி ஒரு அயராத பொது சேவகர், உலகச் சவால்களை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து எதிர்கொள்ளும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர் மறைவு எனக்கு சோகத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் இந்திய மக்களுக்காக எங்களுடைய பிரார்த்தனைகள் இருக்கும்” என்றார்.
செனட்டராக, குறிப்பாக அயலுறவு கமிட்டி உறுப்பினராக அதன் தலைவராக, துணை அதிபராக ஜோ பிடனுக்கும் பிரணாபுக்கும் வலுவான நட்பு இருதது. அமெரிக்காவில் பரவலாக அறியப்பட்ட இந்தியத் தலைவர்களுள் பிரணாபும் ஒருவர்.
“வரலாற்ரில் இந்தியாவின் பெரிய, தனித்துவமான அரசியல் தலைவராகவும், வல்லுநராகவும் வரலாற்றில் அவர் பெயர் நிலைபெறும். வாஷிங்டனுக்கு அவர் பலமுறை வருகை தந்துள்ளார் அமெரிக்க-இந்திய உறவு பெரிய அளவில் விரிவாக்கம் பெறுவதற்கு பிரணாப் பாடுபட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும்ம் வெளியுறவு அமைச்சராக அவர் இந்திய-அமெரிக்க உறவுக்காக நிறைய பங்களிப்பு செய்துள்ளார்” என்று அமெரிக்க, இந்தியா பொருளாதார-பாதுகாப்பு கூட்டுறவு கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி தூதர் ஒருவர் தெரிவித்தார்.
முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய கழகத்தின் ட்விட்டர் பக்கத்தில் , “இந்திய மக்கள் பக்கம் நிற்கிறோம், ஒரு மகாபெரிய தலைவரின் இழப்பை இந்தியா சந்தித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க- இந்திய வர்த்தக கவுன்சில் ‘இந்தியா ஒரு அபாரமான தலைவரை இழந்து விட்டது. இந்திய-அமெரிக்க உறவை நீண்டகாலமாக ஆதரித்தவர் திரு.முகர்ஜி’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, தன் இரங்கல் செய்தியில், “இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத நபர்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பீட் ஆல்சன், “உலகின் பெரிய ஜனநாயகத்தில் அவரது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை ஒரு நிரந்தர உதாரணமாகியுள்ளது” என்று வர்ணித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago