பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்களின் ஊடுருவல் முறியடிப்பு; லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம்: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை

By செய்திப்பிரிவு

லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக லடாக் எல்லை யில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. ராணுவ தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரி ழந்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து எல் லையில் பெருமளவு ஆயுதங்களை யும் வீரர்களையும் இந்திய ராணு வம் குவித்து வைத்திருக்கிறது. சீனாவும் படைகளை குவித்தது. இதனிடையே, எல்லைப் பிரச்சினை தொடர் பாக இந்தியா, சீனா இடையே ராஜ்ஜிய, ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சீன ராணுவ வீரர்கள் லடாக் எல்லைப் பகுதி களில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கினர். எனி னும் சில பகுதிகளில் சீன வீரர் கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

குறிப்பாக பாங்காங் ஏரியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து பின்வாங்க சீன ராணுவம் மறுத்து வருகிறது. இந்த ஏரியின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது.

இந்நிலையில் பாங்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சீன வீரர் கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாங்காங் ஏரிப் பகுதியின் தற் போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்ற சீனா முயற்சி செய் கிறது. இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. எல்லையில் அமைக்கப்பட்டி ருக்கும் இந்திய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. பேச்சுவார்த்தை மூலம் அமை தியை நிலைநாட்டவே இந்திய ராணுவம் விரும்புகிறது. அதே நேரம் இந்திய மண்ணை காப்ப தில் எவ்வித சமரசத்துக்கும் இட மில்லை. இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டபோது போர் பதற்றம் ஏற்பட்டது. இரண் டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் லடாக் எல்லையில் போர் பதற்றம் எழுந்திருக்கிறது.

திபெத்தில் உள்ள ஹோட்டன் விமானப் படைத் தளத்தில் சீன விமானப் படையின் அதிநவீன ஜே-20 போர் விமானங்கள் நிறுத் தப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் அடிக்கடி பறப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.போர் பதற்றத்தை தவிர்க்க லடாக் கின் சூசல் பகுதியில் இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நேற்று முக் கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து ராணுவ வட்டா ரங்கள் கூறும்போது, "தற்போது நடைபெறும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படுமா என்பதை உறுதியாக கூற முடியாது" என்று தெரிவித்தன.

"லடாக் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட் டப்படாவிட்டால் ராணுவ ரீதியாக தீர்வு காணப்படும்" என்று முப் படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அண்மையில் பகிரங்க மாக எச்சரிக்கை விடுத்தார்.

எல்லை நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், ராணுவ தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் லடாக் எல்லை நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ண மாத்தூர் நேற்று லே நகரில் இருந்து டெல்லிக்கு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்