கரசேவகர்கள் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும் நினைவகம்: ராமர் கோயில் வளாகத்தில் அமைக்க திட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 500 ஆண்டுகளாக ராமர் கோயில் போராட்டத்தில் கலந்துகொண்ட கரசேவகர்களின் தியாகத்தை அங்கீகரிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதற்காக ராமர் கோயில் வளாகத்தில் கரசேவகர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் வகையில் ஒரு நினைவகம் அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “ராமஜென்மபூமி வளாகத்தில் அமையும் அனைத்திலும் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இக்கோயிலுக்காக கடந்த 500 ஆண்டுகளாக போராடிய கரவேகர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நினைவகம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

இதன்மூலம், ராமர் கோயிலுக்கு வருபவர்கள் இடையே விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) புகழை பரப்பும் நோக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நினைவகத்தில் விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், விஎச்பி அறக்கட்டளை தலைவர் ஸ்ரீராமச்சந்திர பரமஹம்ஸ் ஆகியோரின் வரலாறும் இடம்பெற உள்ளது. கரசேவை செய்து உயிர்நீத்த கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்