கரோனா காலத்தில் வரும் பண்டிகைகளின் போது மக்கள் ஒழுக்கத்தையும், சமூகவிலகலோடு இருந்து எளிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 67-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்: அவர் பேசியதாவது:
இது பண்டிகைகளின் காலம். அதேசமயம், பண்டிகைகளைக் கொண்டாடும் போது கரோனா வைரஸை மனதில் வைத்து நாம் ஒழுக்கத்தையும், எளிமையையும் கடைபிடிக்க வேண்டும்.
நம்முடைய தேசத்துக்கும், பண்டிகைகளுக்கும் இயற்கையைாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. ஓணம் பண்டிகை இந்த நாளில் மிகச்சிறப்பாக வண்ணமயமாகக் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, சர்வதேச பண்டிகையாக ஓணம் மாறியுள்ளது .நம்முடைய பல்வேறு பண்டிகைகள் இயற்கையோடு தொடர்புடையது, இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தோடும் தொடர்புடையது.
உலகளவில் பொம்மை செய்யும் தொழில் சந்தையின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால், இதில் இந்தியாவின் பங்கு மிகவும் சிறிய அளவுதான் இருக்கிறது. புத்தாக்க சிந்தனையின் மூலம்தான் சிறந்த பொம்மைகள் உருவாக்க முடியும்.
உலகளவில் இந்தியாவின் பங்கு பொம்மை தயாரிப்பில் குறைவாக இருப்பது நமக்கு சரியானது அல்ல. பொம்மை தயாரிப்பில் நாம்முன்னோக்கி நகர்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
நம்முடைய நாட்டின் சில பகுதிகள் பொம்மை தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்குகின்றன. கர்நாடகத்தின் சென்னபட்ணத்தில் உள்ள ராமநகரம், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொண்டபள்ளி நகரம், தமிழகத்தின் தஞ்சாவூர் நகரம், அசாமில் உள்ள துபிர் நகரம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி போன்ற நகரங்கள் பொம்மை தயாரிப்புக்கும், பெயர் பெற்றவை. அந்த நகருக்கே உரிய தனித்துவமான பொம்மைகள் இருக்கின்றன.
புத்தாக்கச் சிந்தனை நிறைந்த இளைஞர்களைக் கொண்டதேசம் இந்தியா. புதிய வகையான பொம்மைகளை உருவாக்க தொழில்முனைவோர்கள் ஆர்வம் காட்டவேண்டும். உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கும், பொம்மைகளுக்கும் ஆதரவு கொடுக்கும் நேரமிது.
கம்ப்யூட்டர் விளையாட்டுகள் இளைஞர்கள், முதியோர் மத்தியில் மிகவும் பிரபலமானவை. ஆனால், மேற்கத்திய விளையாட்டுகள் மீதுதான் பெரும்பாலும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தியாவை ைமயப்படுத்தி விளையாட்டுகளை உருவாக்க வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி விளையாட்டுகள் அமைய வேண்டும்.
பல்வேறுவகையான செயலிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக கூ, சிங்காரி போன்ற செயலிகள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. ஆத்மநிர்பார் பாரத் செயலி புத்தாக்கத்துக்கான சவாலாகும். குட்டுகிட்ஸ் எனும் செயலி குழந்தைகள் எளிதாக கணிதம், அறிவியல் போன்றவற்றை கதைகள் பாடல்கள் மூலம் அறிய வைக்கிறது.
குழந்தைகளுக்கு சரிவிகித சமமான சத்தான உணவும் அளிப்பது அவசியமானது. குழந்தைகளுக்கு முறையான உடல்வளர்ச்சியும், மனவளர்ச்சியும் கிடைக்குமாறு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர்கள் தினம் வருகிறது. கரோனா காலத்தில் நம்முடைய ஆசிரியர்கள் பல்வேறு சவால்களை சந்தித்திருக்கிறார்கள். தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அவர்கள் தங்களை துணிச்சலுடன் மாற்றிக்கொண்டார்கள்.
பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப்பணியில் நாய்களின் பங்கு மகத்தானது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மீட்புப்பணிக்காக பல்வேறு நாய்களை வளர்க்கிறது. பூகம்பம், கட்டிட இடிபாடுகள் போன்றவற்றில் மனிதர்கள் சிக்கி உயிருக்காகப் போராடும் போது அவர்களை நாய்கள்தான் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்திய நாய்களை அதிக அளவில் பாதுகாப்புப் படையினரும், மீட்புப்படையினரும் தங்கள் பிரிவில் சேர்க்கத் தொடங்கியுள்ளார்கள்.
கரோனா வைரஸை நாம் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் ஒழிக்க முடியும். சமூக விலகலைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து நாம் செல்வதின் மூலம் கரோனா வைரஸை ஒழிக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago