இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்கள் உத்திரப்பிரதேசத்தின் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட உள்ளது இதற்கான சட்டதிருத்தம் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை செய்து வருகிறார்
உ.பி.யில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மீதான பேச்சுக்கள் சமீப நாட்களாக எழுந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால் உ.பி.யின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கருத்து கூறி இருந்தார்
இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணைய அமைச்சரும் உ.பி. பாஜக தலைவருமான சஞ்சீவ் பலியானும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்
இந்நிலையில், பாஜக ஆளும் உ.பி. அரசும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து ஆதரித்து வருகிறது இதற்காக, அங்கு இவ்வருட இறுதியில் வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யத் திட்டமிடுகிறது
இதில், இரண்டு குழந்தைகளுக்கும் அதிகம் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது இதற்காக அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் யோசிக்கப்படுகிறது
இதன் மீது நேற்று உபி மாநிலப் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் பூபேந்தரா சிங் சவுத்ரி, முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். தற்போது கரோனா பரவல் சூழலில் பஞ்சாயத்து தேர்தலை ஓத்தி வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
இந்த வருடம் இறுதியில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், அதன் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் வரும் வாய்ப்புகள் உள்ளன உ.பி.யின் பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 30 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்
இதனால், அதில் இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாகப் பெற்றவர்கள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டால் பலன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 23 கோடியாகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago