கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவம்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

By என்.மகேஷ்குமார்

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பிரம்மோற்சவம், நகைகள் டெபாசிட், கரோனா பாதிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட அனைத்து தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அறங்காவலர் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக கோயிலுக்குள் நடத்த தீர்மானித்துள்ளோம். ஆதலால் இம்முறை பக்தர்களின்றி பிரம்
மோற்சவம் நடைபெற உள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் அனைவரின் மருத்துவ செலவுகளையும் தேவஸ்தானமே ஏற்கும். தேவஸ்தான ஊழியர்களுக்கும் அரசின் மருத்துவ காப்பீடு வழங்கும்படி முதல்வருக்கு பரிந்துரை செய்யப்
படும். ரூ.5.5 கோடி செலவில் திருப்பதியில் உள்ள ‘பர்டு’ எலும்பு முறிவு தேவஸ்தான மருத்துவமனையில் கூடுதல் அறைகள் கட்டப்படும். இந்த மருத்துவமனைக்குள்ளேயே குழந்தைகள் நல மருத்துவமனையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சர்வ
தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்