சட்டப்பேரவைக்குள் நான் கட்சியின் பக்கம், வெளியே மக்கள் பக்கம்தான் நிற்பேன்: கட்சி கண்டித்ததையடுத்து உ.பி.பாஜக எம்.எல்.ஏ. திட்டவட்டம்

By பிடிஐ

உத்தரப் பிரதேச மாநில கோரக்பூர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. ராதா மோகன் தாஸ் அகர்வால் கட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் பெற்றுத்தரும் வகையில் சமூக வலைத்தள பதிவுகளை மேற்கொள்கிறார் என்று உ.பி.பாஜக தலைமை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

7 நாட்களுக்குள் அகர்வால் கட்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டி வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை அளித்தவர் மாநில பாஜக பொதுச் செயலர் ஜேபிஎஸ் ராத்தோர், இவர் மாநில பாஜக தலைவர் ஸ்வந்தர தேவ் சிங்கின் ஆணைக்கு இணங்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கோரக்பூர் எம்.எல்.ஏ.அகர்வாலின் அசைக்க முடியாத தொகுதியாகும் இங்கு அவர் 4 முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதாவது இவர் தன் சொந்த வேலைக்காக அந்த சமூகவலைத்தள பதிவை இடவில்லை, மாறாக பாஜக தலைவர் ஒருவரின் உறவினருக்கு நேர்ந்த கதியை அடுத்து ஒருவரும் அந்த விவகாரத்தை காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று சமூகவலைத்தள உதவியை நாடியுள்ளார் அகர்வால்.

பாஜக தொண்டர் மகேந்திர பிரதாப் சிங்கின் உறவினர் அஜித் பிரதாப் சிங் ஜூன் 25ம் தேதி அதிர்ச்சி மரணமடைந்ததே இந்த விவகாரத்துக்குக் காரணம். ஒரு திருமண ஊர்வலத்தில் யாரோ ஒருவர் கொண்டாட்ட மகிழ்ச்சியில் துப்பாக்கியால் சுட வேடிக்கை பார்த்த அஜித் பிரதாப் மீது குண்டு பாய்ந்து பலியானார். யாருமே கவனிக்காமல் அவர் இறந்து போனார்.

தன் அண்டை வீட்டாரான முஸ்தபாவின் மகள் திருமணத்தை அஜித் தன் பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மகிழ்ச்சித் திளைப்பில் ஷானு கான் என்பவர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அப்போது தோட்டா பாய்ந்து அஜித் பலியானார்.

இறந்த அஜித்தின் உடல் பால்கனியில் 2 நாட்கள் அப்படியே இருந்துள்ளது. பிரேதப் பரிசோதனையிலும் தோட்டா காயத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் லகிம்புர் போலீச் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதி கெட்டு அஜித்தின் உறவினர் மகேந்திர பிரதாப் சிங் எவ்வளவோ தன் செல்வாக்கைப் பயன்படுத்திப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை.

அப்போதுதான் கோரக்பூர் எம்.எல்.ஏ. அகர்வால் தலையிட்டு ட்விட்டர் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அணுகியிருக்கிறார். இவர் கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) மற்றும் போலீஸ் தலைமையை ஆகஸ்ட் 17ம் தேதி பலமுறை அழைத்தும் பதில் இல்லை.

சோஷியல் மீடியாவில் போய் பதிவிட்டவுடன் தான் அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

பிறகே போலீசார், திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அஜித் பலியாவதற்குக் காரணமான நபரைக் கைது செய்துள்ளனர். இதனையடுத்து தன் ட்வீட்டையெல்லாம் எம்.எல்.ஏ. அகர்வால் நீக்கி விட்டார்.

தன்னுடைய இந்தச் செயல் கட்சிக்கு எதிரான, அரசுக்கு எதிரான செயலாக விளங்கிக் கொள்ளக்கூடாது என்ற எம்.எல்.ஏ. அகர்வால், “சட்டப்பேரவைக்குள்தான் நான் கட்சியின்பக்கம், வெளியே மக்கள் பிரதிநிதியாக மக்கள் பக்கம் தான் நிற்பேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் இவர் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாஜக மாநிலத் தலைமை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்