அடுத்த 4 நாட்களுக்கு வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பு மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் உத்தராகண்ட் மாநிலத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கும் ஆகஸ்ட் 28ம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ராஜஸ்தானுக்கு ஆகஸ்ட் 29-30-ல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள மாநிலங்கள் வருமாறு:
ஜம்மு காஷ்மீர் (ஆகஸ்ட் 27)
இமாச்சலம் (ஆகஸ்ட் 27-28)
கிழக்கு உ.பி. (ஆக.27, 29-30)
கிழக்கு ராஜஸ்தான் (ஆக.27-28)
பஞ்சாப் (ஆகஸ்ட் 27-28)
ஹரியாணா, டெல்லி (ஆக.27-29)
மேற்கு ராஜஸ்தான் (ஆக.29-30)
ஏற்கெனவே பெய்த கடும்மழையில் வட இந்தியாவின் பல நதிகளில் வெள்ள நீர் அபாய எல்லையை தொட்டு விடும் நிலையில் இருந்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் யமுனை நதியில் நீர்மட்டம் அபாய மட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 19 மாவட்டங்களில் உள்ள 922 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 571 கிராமங்கள் மிதக்கின்றன. உ.பியில் கிட்டத்தட்ட 620 கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago