கரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாள் முதல் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் முதல்முறையாக 75,000-த்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதித்துள்ளது.
இதனால் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்தைச் சடுதியில் கடந்து விட்டது என்று மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக 75,760 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிகை 33 லட்சத்து 10 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளாது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1023 பேர் கோவிட்-19 வைரஸுக்கு பலியாக மொத்த பலி எண்னிக்கை 60 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 25 லட்சத்து 23 ஆயிரத்து 771 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளது. மரண விகிதம் 1.83% ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் தற்போது 7 லட்சத்து 25 ஆயிரத்து 991 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். ஆகஸ்ட் 7ம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23ம் தேதி 30 லட்சத்தைக் கடந்தது. இன்று 33 லட்சத்தைக் கடந்து விட்டது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி 3 கோடியே 85 லட்சத்து 76 ஆயிரத்து 510 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. புதனன்று மட்டும் 9 லட்சத்து 24 ஆயிரத்து 998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 1023 பேர் மரணமடைந்ததில் மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 295 பேர் பலியாகினர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 133 பேர் பலியாகினர். தமிழ்நாட்டில் 118 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திராவில் 81 பேர் பலியாகியுள்ளனர்.
உ.பி.யில் 90, மேற்கு வங்கம் 55, உத்தராகண்ட் 6, திரிபுரா 2, தெலங்கானா 8, ராஜஸ்தான் 12, பஞ்சாப் 41, புதுச்சேரி 8, ஒடிஷா 13, மணிப்பூர் 1, மத்தியப் பிரதேசம் 17, லடாக் 1, கேரளா 13, ஜார்கண்ட் 15, ஜம்மு காஷ்மீர் 19, இமாச்சலம் 2, ஹரியாணா 11, குஜராத் 17, கோவா 8, டெல்லி 17, சத்தீஸ்கர் 10, சண்டிகர் 1, பிஹார் 11, அஸாம் 14, அந்தமான் நிகோபார் 4 பேர் என்று மாநிலவாரியாக கடந்த 24 மணி நேரத்தில் கரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.
மொத்த பலி எண்ணிக்கையில் மகாராஷ்ட்ரா தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் 23,089 மரணங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2வதாக தமிழகம் 6,839 பலிகளுடன் உள்ளது. கர்நாடகாவில் மொத்த பலி எண்ணிக்கை 5,091 ஆக உள்ளது. டெல்லியில் 4347, ஆந்திராவில் 3,541, குஜராத்தில் 2,945, ம.பி.யில் 1282, பஞ்சாபில் 1219, உ.பி.யில் 3,149, மேற்கு வங்கத்தில் 2964 என்று மொத்த பலி எண்ணிக்கை உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago