தெலங்கானாவில் தினமும் உணவளித்த விவசாயி உடலுக்கு அஞ்சலி செலுத்திய கன்று

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்திலுள்ள சாரலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகர் வயது (70). இவர், ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மனோகர் மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று காலையில் இவரது உடலை வீட்டின் முன்பாக வைத்து உறவினர்கள் சோகத்தில் அழுது கொண்டிருந்தனர்.

அப்போது வழக்கம்போல ஒரு பசுவும், கன்றும் மனோகரின் உடல் அருகே வந்து சோகமாய் நின்றது. அங்குள்ளவர்கள் அனைவரையும் சுற்றி சுற்றிப் பார்த்தது. மனோகரனின் உடலின் அருகே சென்று நாவால் நக்கி அவரை எழுப்ப முயன்றது. பின்னர் அவருடைய பாதத்தின் அருகே சென்று சற்று நேரம் தலை வைத்து படுத்து கவலையுடன் காணப்பட்டது. இதை கவனித்த உறவினர்கள் மேலும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தனக்கு உணவளித்த ஒருவரின் மரணம் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்