ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசி: மனிதர்களுக்கான 2ம் கட்ட சோதனை புனேயில் தொடக்கம்

By பிடிஐ

கரோனா வைரஸுக்கு எதிராக நம்பிக்கையூட்டும் தடுப்பூசிகளில் ஒன்றான ஆக்ஸ்போர்டு வாக்சின் புனேயில் இரண்டாம் கட்ட மானுட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

பாரதி வித்யாப்பீட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரு தன்னார்வலர்களுக்கு வாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. இந்தச்சோதனை புனேயில் புதன் மதியம் ஒருமணியளவில் தொடங்கியது.

“கோவிஷீல்ட் என்ற இந்த வாக்சினை மருத்துவர்கள் 32 வயது நபருக்கு செலுத்தினர். அதாவது இவருக்கு சோதனையில் கரோனா நெகட்டிவ் என்று வந்ததையடுத்து இவருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது” என்று பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தின் டாக்டர் சஞ்சய் லால்வானி தெரிவித்தார்.

48 வயதுடைய இன்னொரு தன்னார்வலருக்கு கோவிஷீல்ட் வாக்சின் செலுத்தப்பட்டுள்ளது.

வாக்சின் செலுத்தப்படுவதற்கு முன்பாக மருத்துவர்கள் இருவருக்கும் உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு ஆகியவற்றை சரிபார்த்தனர்.

5 தன்னார்வலர்கள் தாமாகவே முன் வந்து வாக்சின் சோதனைக்குத் தயார் என்று பதிவு செய்தனர்.

இவர்கள் அனவிவருக்கும் கோவிட் ஆண்ட்டி பாடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பேரின் சோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. எனவே அவர்க இந்தச் சோதனைக்கு தகுதி பெறவில்லை, என்று டாக்டர் லால்வானி தெரிவித்தார்.

தற்போது இருவருக்கு வாக்சின் செலுத்தப்பட்டு இருவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 7 நாட்களுக்கு 25 பேருக்கு வாக்சின் செலுத்தப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்