முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் உட்பட பஞ்சாபின் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா பாசிட்டிவ்

By பிடிஐ

ஆகஸ்ட் 28ம் தேதி விதான்சபா அமர்வு தொடங்கவுள்ள நிலையில் பஞ்சாபின் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ பர்கத் சிங், அகாலி எம்.எல்.ஏ. குருபிரதாப் சிங் வாதலா மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மஞ்சித் சிங் பிலாஸ்பூர் ஆகியோருக்கு கரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பர்கத் சிங் முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன், தனக்கு கோவிட் 19 க்கான எந்த ஒரு குறிகுணங்களும் இல்லை என்றார்.

செவ்வாயன்று பஞ்சாப் அமைச்சர் சுந்தர் ஷாம் அரோரா, காங். எம்.எல்.ஏ ராஜ்புரா ஹர்தயால் காம்போஜ், அகாலி எம்.எல்.ஏ. ஹரிந்தர்பால் சிங் சாந்துமஜ்ரா ஆகியோருக்கு கரோனா பாசிட்டிவ் என்பது தெரியவந்தது.

பஞ்சாப் சட்டப்பேரவை அமர்வு ஆகஸ்ட் 28ம் தேதி கூடுகிறது.

சட்டப்பேரவை தலைவர் ராணா கே.பி.சிங், கரோனா வைரஸ் நெகெட்டிவ் மருத்துவ அறிக்கை அவசியம் என்று ஏற்கெனவே அமைச்சர்கள், உறுப்பினர்கள், அலுவலர்க்ள், ஊழியர்கள் அனைவருக்கும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்