முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜவில் இணைந்தார். டெல்லியில் பாஜக பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்.
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அங்கு பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியபோது கடும் நடவடிக்கைகளால் அங்கு பெயர் பெற்றார்.
பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் அண்ணாமலை பணியாற்றினார். கடந்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழகம் திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதுமட்டுமின்றி அவர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். இதனால் அவர் விரைவில் அரசியல் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியானது.
» அதிமுக தலைமையில்தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
» விஜயகாந்த் இனி 'கிங்'காக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்: பிரேமலதா பேட்டி
இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பணியாற்றுவேன்’’ என்றார்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago