காங்கிரசுக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர், இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து, காங்., இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தியின் கடித உள்ளடக்கங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ஆகியோர் இந்திரா காந்தி குடும்பத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து, கட்சியின் இடைக்கால தலைவராக கடந்தாண்டு ஆக.,10ம் தேதி சோனியா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24-ல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சோனியாவுக்கு, காங்., கட்சியின் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ்பாபர், மிலிந்த் தியோர், சந்தீப் தீக்ஷித், ரேணுகா சவுத்ரி, மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர் கடிதம் எழுதியுள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதை எந்தத் தலைவரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், சோனியா இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியினர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள சோனியா, அனைவரும் கூட்டாக புதிய தலைவரை தேர்வு செய்வோம் எனவும் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago