தேசியக் கல்விக்கொள்கை தொடர்பாக நாளை முதல் 31-ம் தேதிவரை ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்: மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு

By பிடிஐ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதியக் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நாளை(திங்கள்கிழமை) முதல் 31ம் தேதிவரை கருத்துக்களையும், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 34-ம் ஆண்டுகளாக இருந்த கல்விக் கொள்கையை மாற்றிவிட்டு, புதிய தேசியக் கல்லி கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த கல்விக்கொள்கைக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகஅறிவின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்றும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் பல்ேவறு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் 5-ம் வகுப்புவரை தாய்மொழி அல்லதுமாநில மொழிக் கற்றல், மும்மொழிக்கொள்கை, உயர்கல்வித் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதில் சீர்திருத்தம், கல்லூரிகளுக்கு அதிகமான சுயாட்சி உரிமை, பல்கலைக்கழகங்களுக்கு பொதுவான நுழைவுத்ததேர்வு போன்ற சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கையை பல்வேறு மாநிலங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு முன் ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளன. இந்தசூழலில் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மத்திய கல்வி்த்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

நாளை முதல்(24-ம்தேதி) 31-ம் தேதிவரை http://Innovateindia.mygov.in/nep2020 எனும்இணையதளத்தில் சென்று ஆசிரியர்கள் தங்கள்ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்விச் செயலாளர் அனிதா கார்வால் கூறுகையில் “ ஆசிரியர்கள் புதியக் கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளை எளிதாக தெரிவிக்கும்பொருட்டு, தேசியக் கல்விக்கொள்கையின் ஒவ்வொரு கருத்துரு தொடர்பாக கேள்வி பதிலை உருவாக்கியுள்ளோம்.

இந்தக் கேள்விகளை ஆசிரியர்கள் வகுப்புகளில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதோடு ஒப்பிட்டு பதில் அளிக்கலாம். ஒவ்வொரு கேள்வியையும் ஆசிரியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையின் பத்திகளும் தரப்பட்டுள்ளன. அதைப்படித்தபின் கருத்துக்களை பதிவேற்றம் செய்யலாம்.

என்சிஇஆர்டியின் வல்லுநர்கள் குழு அனைத்து ஆலோசனைகள்,கருத்துக்களையும் பெற்று பரிசீலிப்பார்கள். ஆலோசனைகள் குறைந்த வார்த்தைகளில் இருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகளை உருவாக்குவது, தி்ட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரிய அளவில் ஆலோசனைகள் ஆசிரியர்களுக்கு இருந்தால் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளலாம் “ எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாளர்கள் ஆசிரியர்கள்தான் என நம்புகிறோம்.

ஆதலால், தேசியக் கல்விக் கொள்கையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லாம் என்பது குறித்து நாடுமுழுவதும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசியர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்