பல்வேறு சிக்கல்களில் இருந்து வரும் ஜம்மு காஷ்மீரில் அதன் உதாம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுனில் குமார் தேசியவிருதுக்காக மத்திய கல்வி அமைச்சகத்தினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுனில் குமார் அரசுப் பள்ளியில் படித்தவர்தான். இவர் ஆன் லைன் வகுப்புகளில் படிக்க வசதியில்லாத நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்காக சமூக வகுப்புகளை நடத்தினார்.
இது தொடர்பாக சுனில் குமார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “நல்ல எதிர்காலத்துக்கு கல்விதான் திறவுகோல். நடுநிலைப்பள்ளி என்பதால் எங்களிடம் பணம் இல்லை. ஆனாலும் அதை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி குழந்தைகளுக்குக் கல்வி போதித்து வருகிறேன். நானே அரசுப்பள்ளி மாணவனாக இருந்து தேறி வந்தவன் தான். எனவே கல்வி கற்றுக் கொடுக்க முடிகிறது என்பது எனக்கு பெருமையாக உள்ளது.
மார்ச் மாதம் முதலே மாணவர்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். ஆனால் நான்பள்ளிக்கு வந்து மின் பாடங்களுக்குத் தயார் செய்வேன். அவர்களுக்கு பாடங்களின் வீடியோக்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்புவேன், யூடியூப் மூலமும் அனுப்புவேன். ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு சமூக வகுப்புகளும் எடுத்தேன், அதில் கரோனா தடுப்புகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்தேன்” என்றார்.
» கால தாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு
உள்ளூர்வாசிகள் சுனில்குமாரின் முயற்சியை விதந்தோதி வருகின்றனர். இவருக்கு விருது வழங்குவது முற்றிலும் தகுதியானதே என்கின்றனர்.
உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, “எங்கள் கிராம அரசுப்பள்ளி ஆசிரியர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதில் எங்களுக்கெல்ல்லாம் பெருமை. அவர் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடுகிறார். இவர்களைப் போன்றவர்களை அங்கீகரிக்க வேண்டும்” என்றார்.
9ம் வகுப்புப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி சப்னா வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் தன் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.
தேசிய கல்வி விருது 2020-க்கு நாடு முழுதும் 47 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago