மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஒடிசாவில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும் மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை கனமழையும் பெய்தது.
29 இடங்களில் பிஹார் 16, அஸ்ஸாம் 4, உத்திர பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் ஒன்று, ஜார்கண்டு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்) ஆகியவற்றில் கடுமையான வெள்ள நிலைமைகளும், 30 இடங்களில் (பீகார் 9, அஸ்ஸாம் 6, உத்திரபிரதேசத்தில் 6, தெலங்கானாவில் 3, ஆந்திராவில் 2 மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் 1) அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர்ப் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்தப் பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
41 வெள்ளத் தடுப்பணைகள் மற்றும் அணைகளுக்கு (கர்நாடகாவில் 13, மத்தியப்பிரதேசம் மற்றும் ஆந்திராவில் தலா 5, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஜார்கண்டில் தலா 3 மற்றும் சத்தீஸ்கர், குஜராத் மற்றும் ஒடிசாவில் தலா 1) வெள்ள நீர்வரத்து குறித்த முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவின் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 20ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆகஸ்ட் 20 முதல் 21, 2020 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago