கோவிட்-19 நோயில் இருந்து குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை சுமார் 21 லட்சத்தை நெருங்கியது.
குணம் பெறுவோர் விகிதம் இன்னும் அதிகரித்தது. இன்று 74 சதவீதமாக இருந்தது
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம்
கோவிட்-19 நோய் பாதிப்பு ஆளானவர்களில், நிறைய பேர் குணம் அடைந்து வீடு திரும்பும் நிலையில் மற்றும் மிதமான பாதிப்புக்கு ஆளாகி வீட்டில் தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்து குணம் ஆனவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்தியாவில் இந்த நோயில் இருந்து குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை சுமார் 21 லட்சத்தை எட்டியது.
தீவிரமாக மருத்துவப் பரிசோதனை செய்தல், விரிவான தடமறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சை ஆகிய விஷயங்களை செம்மையாக அமல் செய்த காரணத்தால், குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை 20,96,664 ஆக உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நிலைக்குச் செல்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட சிகிச்சை முறையில் கவனம் செலுத்துதல், சிறந்த நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் ஐசியூ மற்றும் மருத்துவமனைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுதல், ஆம்புலன்ஸ் வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக இந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 58,794 பேர் குணம் ஆகியுள்ளனர். இதையடுத்து கோவிட் - 19 பாதிப்புக்கு ஆளானவர்களில் குணம் பெற்றவர்கள் விகிதம் 74 சதவீதமாக (73.91%) ஆக உயர்ந்துள்ளது. கடந்த பல மாதங்களாக குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.
இந்தியாவில் 6,86,395 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக (14,10,269) ஆக உள்ளது. இதன் காரணமாக சிகிச்சையில் இருப்போர் சதவீதம் 24.19 ஆக உள்ளது.
பரிசோதனை மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே நோய் பாதிப்பைக் கண்டறிதல் , தொடர் கண்காணிப்பு மற்றும் தொடர்புத் தடமறிதல், உரிய சமயத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவை காரணமாக, தொற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை உலக சராசரியைவிடக் குறைவாக உள்ளது. (இப்போது 1.89 சதவீதமாக உள்ளது). இவற்றின் காரணமாக, சிகிச்சையில் இருப்பவர்களில் வென்டிலேட்டர் வசதி தேவைப்படுவோர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago