இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29லட்சத்தைக் கடந்துள்ளது, குணமடைந்தோர் 74 சதவீதத்தைக் கடந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக 68 ஆயிரத்து 898 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு அளவு 298 லட்சத்து 5 ஆயிரத்து 823ஆக அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை 28 லட்சத்தைக் கடந்த நிலையில் இன்று 29 லட்சமாக அதிகரித்துள்ளது.கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில் 13 நாட்களில் 8 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்குகிறது,இதுவரை 221 லட்சத்து 58 ஆயிரத்து 946 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 74.30 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 23.82 சதவீதம் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 983 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 54ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு வீதம் 1.89 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 326 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 102 பேர், தமிழகத்தில் 116 பேர், ஆந்திரா, உத்தரப்பிரதேசத்தில் தலா 95 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் 53 பேர், பஞ்சாபில் 36 பேர், டெல்லியில் 22 பேர், குஜராத்தில் 16,மத்தியப்பிரதேசத்தில் 12 பேர், ஹரியானா, ராஜஸ்தானில் தலா 11 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட், கேரளா, உத்தரகாண்டில் தலா 9 பேரும், அசாம், ஒடிசா, தெலங்கானா, புதுச்சேரியில் தலா 8 பேரும், சத்தீஸ்கரில் 7 பேரும், ஜ்மு காஷ்மீரில் 6 பேரும் உயிரிழந்தனர்
பிஹாரில் 5 பேர், இமாச்சலப்பிரதேசம், திரிபுராவில் தலா 4 பேர், கோவாலி் இருவர், அந்தமான் நிகோபர் தீவில் ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை கரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியை 34 லட்சத்து 67ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டும் 8 லட்சத்து 5ஆயிரத்து 985 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 326 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21ஆயிரத்து 359ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 62ஆயிரத்து 806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 116 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 11 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,257 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். 16 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,853ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 82,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 102 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,429 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 18,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago