கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து சட்ட அமைச்சர் மதுசாமி கூறும்போது, "கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய இரு கட்சிகளும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி நடந்த கலவரத்திலும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய கட்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதுவரை இரு கட்சிகளின் தொடர்பு குறித்த ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. போலீஸாரின் விசாரணைக்குப் பிறகே பெங்களூரு கலவரத்தில் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ கட்சிகளுக்கு உள்ள பங்கு பற்றி தெரியவரும். உரிய ஆதாரங்கள் இல்லாமல் அந்தக் கட்சிகளை தடை செய்யும் முடிவை எடுக்க முடியாது. முதல் கட்டமாக அந்த கட்சிகளை தடை செய்வது குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்துகேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை மற்றும் சட்டத் துறையின் கருத்துகள் கிடைத்த பிறகு அக்கட்சிகளை தடை செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago