ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 27% சிபிஎஸ்இ மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தற்போது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:

கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் என 34 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 27 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்கள் இல்லை. அத்துடன், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் போது மின்தடை பெரிய சிக்கலாக உள்ளது என்று 28 சதவீத மாணவர்கள், பெற்றோர் கூறுகின்றனர். தவிர ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற தொழில்நுட்பக் கருவிகளை கல்விக்காக எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியவில்லை. இதனால் கல்வி கற்பது சிக்கலாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தங்களிடம் என்ன புத்தகங்கள் இருக்கின்றனவோ அவற்றை வைத்து கல்வி கற்பதாக 36 சதவீத மாணவர்கள் கூறியுள்ளனர். கல்விக்காக தொலைக்காட்சி, வானொலிகளைப் பயன்படுத்துவோர் மிகமிகக் குறைவாக உள்ளனர். ஆன்லைனில் கணித பாடம் கடினமாக உள்ளது என்று பலர் கூறியுள்ளனர்.

இவ்வாறு என்சிஇஆர்டி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

மேலும்