இந்தியாவில் கரோனா நோயில் இருந்த குணமடைவோர் விகிதமும் உச்ச அளவை அடைந்து 73 சதவீதத்தை தாண்டியுள்ளது. விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட்-19 பரிசோதனைகளில் இதுவரையிலும் மொத்தமாக 3 கோடி பரிசோதனைகள் என்ற அளவைத் தாண்டி இந்தியா உச்ச அளவை அடைந்து உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கரோனா நோயில் இருந்த குணமடைவோர் விகிதமும் உச்ச அளவை அடைந்து 73%த்தைத் தாண்டியுள்ளது. விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட்-19 பரிசோதனைகளில் இதுவரையிலும் மொத்தமாக 3 கோடி பரிசோதனைகள் என்ற அளவைத் தாண்டி இந்தியா உச்ச அளவை அடைந்து உள்ளது.
இந்தியாவில் குணமடைவோர் விகிதமும் உச்ச அளவை அடைந்து, 73%த்தைத் தாண்டிவிட்டது
» இ-சஞ்சீவனி மூலமாக மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம்
» கரோனாவைச் சமாளிக்க 2-வது கட்டமாக 100 வென்டிலேட்டர்கள்: இந்தியாவிடம் வழங்கியது அமெரிக்கா
இந்த இரண்டு சாதனைகளோடு மூன்றாவது சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,091 என்ற உச்ச அளவை அடைந்து உள்ளது. கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனயில் இருந்து விடுவிக்கப்படுபவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (மிதமான மற்றும் நடுத்தரமான நோய்நிலைமை உள்ளவர்கள்) எண்ணிக்கை அதிகரித்திருப்பதினால் குணம் அடைபவர்களின் விகிதமானது உச்ச அளவாக 73%ஐ கடந்து உள்ளது (73.64%). இது தொற்றுள்ளவர்கள் இடையில் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது. இந்த இறப்பு விகிதம் இன்று புதிய சாதனையாக 1.91%க்கும் குறைவாக உள்ளது.
சாதனை அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் தற்போது சிகிச்சை
பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதத்தை குறைத்து உள்ளது. அதாவது தற்போது இந்த விகிதம் மொத்த தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட ¼ என்று (24.45% மட்டும்) உள்ளது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதும் இறப்பு விகிதம் குறைந்து வருவதும் இந்தியாவின் படிப்படியான செயல் உத்தியானது, பலன் தருவதை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட (6,76,514) குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை 13,61,356 என பதிவிட்டு உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago