இ-சஞ்சீவனி மூலமாக மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம் 

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் டிஜிட்டல் தளமான இ-சஞ்சீவனி மூலமாக மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் டிஜிட்டல் தளமான இ-சஞ்சீவனி மூலமாக 2 லட்சம் தொலைபேசி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி மருத்துவச் சேவை மூலமாக ஒன்றரை லட்சம் தொலைபேசி மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டது நிறைவடைந்ததை ஒட்டி மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையில் 9 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

பிரதமரின் முயற்சியான டிஜிட்டல் இந்தியாவிற்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ள சஞ்சீவனி தளம் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு கவனம் அளிப்பவர்கள், மருத்துவச் சமுதாயத்தினர் ஆகியோரை அணுகுவதற்கும், கோவிட் காலத்தின் போது உடல்நலச் சேவைகள் பெற விரும்புபவர்கள் ஆகியோருக்கும், சஞ்சீவனி தளம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

சஞ்சீவனி தளத்தில் இரண்டு வகையான சேவைகள் உள்ளன. மருத்துவருக்கும் - மருத்துவருக்கும் இடையேயான சேவைகள் (இ-சஞ்சீவனி) நோயாளிக்கும் - மருத்துவருக்கும் இடையேயான சேவைகள் (இ-சஞ்சீவனி ஓ பி டி) தொலைபேசி மருத்துவ ஆலோசனைகள். இ-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியம், நலவாழ்வு மையங்களின் (Ayushman Bharat Health and Wellness Centre - AB-HWC). மூலமாக செயல்படுத்தப்படுகின்றது.

“ஹப் அண்ட் ஸ்போக்” மாடல் எனப்படும் “மையத்திலிருந்து - இதர இடங்களுக்கு” என்ற மாதிரியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்து ஒன்றரை லட்சம் ஆரோக்கியம், நலவாழ்வு மையங்களின் மூலமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றை மாநிலங்கள் தெரிந்தெடுத்துள்ளன. இவை ‘மையங்களாகச்’ செயல்படும். துணை சுகாதார மையங்கள் (Sub Health Centres - SHC), ஆரம்ப சுகாதார மையங்கள் (Primary Health Centres – PHCs) and HWCs. ஆகியவை ஆரக்கால்களாகச் செயல்படும்.

இரண்டாவது வகையான தொலைபேசி மருத்துவ தேவையான சஞ்சீவனி ஓபிடி நோயாளிகளுக்கும் - மருத்துவர்களுக்கும் இடையேயான தொலைபேசி வழி மருத்துவ சேவைத் திட்டத்தை செயல்படுத்துகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. கோவிட்-19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமைந்தது. கோவிட் அல்லாத பிற அடிப்படை உடல்நலத் தேவைகளுக்கும் இது உதவுவதாக அமைந்தது.

இதுவரை 23 மாநிலங்களில் சஞ்சீவினி சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் இவற்றை நடைமுறைப்படுத்த உள்ளன.

இந்த மின் சுகாதாரச் சேவையைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஐந்து மாநிலங்கள் வருமாறு:
தமிழ்நாடு (56346 ஆலோசனைகள்); உத்தரப்பிரதேசம் (33,325); ஆந்திரப்பிரதேசம் (29,400); இமாச்சலப்பிரதேசம் (26,535); கேரளா (21,433). ஆரோக்கியம், நலவாழ்வு மையங்களில் (Health and Wellness Centres - HWC) கலந்தாலோசனைகளில் அதிகபட்சமாக உள்ளது ஆந்திரப்பிரதேசம் (25,478 ஆலோசனைகள்).

ஓ பி டி சேவைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது (56346 ஆலோசனைகள்) குறிப்பிடத்தக்கது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்