மத்திய தேர்தல் ஆணையர் அசோக் லவசா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஹரியாணா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அசோக் லவசா, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் ஆணையராக பதவியேற்றார். இதற்கு முன்பாக, மத்திய நிதித்துறைச் செயலராகவும், சுற்றுச்சூழல் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, அந்தப் பதவியை அசோக் லவசா ஏற்பதாக இருந்தது. இதனிடையே, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவசா நியமிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அந்தப் பொறுப்பை ஏற்பதற்காக அசோக் லவசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago