அடுத்த 4-5 நாட்களுக்கு ஒடிசா, சத்தீஷ்கர் மாநிலங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
மழைப்பொழிவு முன்னறிவிப்பு அடிப்படையில், பல்வேறு மாநிலங்களுக்கான அறிவுரைகளை புயல் எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது:
குஜராத், மகாராஷ்டிரா, கோவா
மத்திய மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் மலைப்பகுதிகளில் , பரவலாக மிக பலத்த மழை பெய்யும். மற்ற இடங்களில், கனத்த மழை முதல் மிகப்பலத்த மழை பெய்யக்கூடும்.
ஒடிசா, சத்தீஷ்கர், ஆந்திரா, தெலங்கானா
அடுத்த 4-5 நாட்களுக்கு ஒடிசா, சத்தீஷ்கர் மாநிலங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானாவில் மிக பலத்த மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா
கிருஷ்ணா படுகையில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் அளவு 86 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை உள்ளது. ஹிட்கால் அணையின் மொத்த கொள்ளளவில் 98 சதவீதம் நீர் நிரம்பியுள்ளதால், 28,656 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்
அடுத்த 3 நாட்களுக்கு, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதால், சம்பல், மகி, சபர்மதி, கலிசிந்த் பனாஸ் (கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓட்டம்) போன்ற ஆறுகளில் தண்ணீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு .
இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம்
பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு. உத்தரகாண்டில் அதிதீவிர மழைப்பொழிவு காரணமாக, சட்லெஜ், ரவி, பியாஸ், கக்கர், யமுனா, பாகிரதி, அலகண்டா, கங்கை, ராம்கங்கா, சாரதா, சர்ஜூ, காக்ரா போன்ற நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.
பிஹார், ஜார்க்கண்ட், கங்கை தீர மேற்கு வங்கம்
பிஹாரில் பல ஆறுகளில் தொடர்ந்து, இயல்புக்கும் அதிகமான அளவு வெள்ள நிலை நிலவுகிறது. இந்த நிலை 3-4 நாட்களுக்கு நீடிக்கும்.
வடகிழக்கு மாநிலங்கள்
அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த முதல் மிக பலத்த மழை வரை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா ஜோர்கத், சோனித்பூர், கோலாகாட், சிப்சாகர், துப்ரி மாவட்டங்களில் உள்ள துணை நதிகளில் வெள்ளநிலை தொடரும். மழை முன்னறிவிப்பால், மற்ற மாவட்டங்களிலும் வெள்ள நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago