கேரளாவில் 1,758 பேருக்குத் தொற்று, 6 பேர் இறப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

By செய்திப்பிரிவு

கேரளத்தில் இன்று புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,758. இத்தொற்று காணப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 1,365 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மொத்த இறப்பு எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றினால் இன்றைய இறப்புகள் 6 உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் பாதும்மா (76), வயநாடு மாவட்டத்தில் மொயிட்டு (59), கோழிக்கோடு மாவட்டத்தில் கவுசு (65), ராஜலட்சுமி (61), விஜயா ( 32) மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சத்யன் (54) ஆகியோர் இந்த இறந்தவர் பட்டியலில் வந்தவர்கள். ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பிறகு மேலும் இறப்புகள் உறுதி செய்யப்படும்.

நோய்த் தொற்று கண்டவர்கள் மாவட்ட வாரியான புள்ளிவிவரம்:
திருவனந்தபுரம் 489, மலப்புரம் 242, எர்ணாகுளம் 192, கோழிக்கோடு 147, ஆலப்புழா 126, கண்ணூர் 123, கோட்டயம் 93, கொல்லம் 88, பதனம்திட்டா 65, பாலக்காடு 51, திருச்சூர் 48, வயநாடு 47, காசர்கோடு 42, இடுக்கி மாவட்டத்தில் 5. .

தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்:
திருவனந்தபுரம் 476 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 220 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 173, கோழிக்கோடு மாவட்டத்தில் 146, ஆலப்புழா மாவட்டத்தில் 117, கண்ணூர் மாவட்டத்தில் 111, கொல்லம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தலா 86, பத்தனம்திட்டா மாவட்டத்தில் 52 பேர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 44, திருச்சூர் மாவட்டத்தில் 42, காசர்கோடு மாவட்டத்தில் 40 மற்றும் இடுக்கி மாவட்டத்தில் 4.

சுகாதாரப்பணியாளர்கள் 25 பேர் தொற்று பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் மாவட்ட வாரியான விவரம்: திருவனந்தபுரம் 10, மலப்புரம் 6, எர்ணாகுளம் 4, பாலக்காடு 3, திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒன்று. எர்ணாகுளம் மாவட்டத்தில் 11 ஐ.என்.எச்.எஸ் பணியாளர்களும் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். மொத்தமாகத் தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,758 ஆகும்.

தொற்று மீட்பு நடவடிக்கையில் குணமானவர்கள் மாவட்ட வாரியாக:
திருவனந்தபுரம் 310, கொல்லம் 54, பத்தனம்திட்டா 29, ஆலப்புழா 65, கோட்டயம் 48, இடுக்கி 59, எர்ணாகுளம் 64, திருச்சூர் 33, பாலக்காடு 82, மலப்புரம் 194, கோழிக்கோடு 195, வயநாடு 46, கண்ணூர் 61, காசர்கோடு 125. இதன் மூலம், இதுவரை 31,394 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர், தற்போது 16,274 நோயாளிகள் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மொத்தம் 1,65,564 பேர் வீடு அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தலின் கீழ் 1,51,931 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 13,633 பேர் உள்ளனர். 1,583 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 29,265 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதிக ஆபத்துள்ள குழுக்களின் சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக 1,51,714 மாதிரிகள் உட்பட மொத்தம் 12,40,076 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 13 புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக நியமிக்கப்பட்டன, 18 இடங்கள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 565 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE