மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப் பணி: சவுகான் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

நாட்டின் பல மாநிலங்களில் அரசுப் பணிகள் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற சட்டம் உள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை, நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75% சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே இனிமேல் விண்ணப்பிக்க முடியும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளதாவது:

மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும். இதற்கு ஏற்றவகையில் சட்டம் கொண்டுவரப்படும். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்