பழம்பெரும் பாடகர்  பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

By செய்திப்பிரிவு

இந்திய பாரம்பரிய இசை பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 90.

பழம்பெரும் இந்திய பாரம்பரிய இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ். ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு பிறந்த ஜஸ்ராஜ், 80 ஆண்டுகளாக பாடல்கள் பாடி வந்துள்ளார்.

ஏராளமான கச்சேரிகளை உலகெங்கும் நிகழ்த்தியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணற்ற ஆல்பங்களாக வெளிவந்துள்ளன. இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இசையும் கற்றுக் கொடுத்தார். அமெரிக்காவில் தங்கயிருந்த அவர் ஊரடங்கு காரணமாக நியூஜெர்ஸியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்தநிலையில் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். நியூஜெர்ஸியில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற அவருக்கு,இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

ஜஸ்ராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி கூறுகையில் ‘‘ஜஸ்ராஜின் இழப்பு நாட்டின் கலாச்சாரத்தில் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாதனை மிகச்சிறந்த ஒன்று. பல பாடகர்களுக்கு அவர் தனித்துவமான வழிகாட்டியாக இருந்தார். அவர் தனித்த அடையாளத்தை கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.” என்று பிரதமர் தன்னுடைய இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்