முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பாபர் மசூதியின் பூட்டை திறந்து விட்டாரா என்ற தெளிவு காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கே இல்லை என பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும், 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸும் வரவேற்றுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பதிவு செய்துள்ள வீடியோ செய்தியில் கூறுகையில் ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வரவேற்கிறேன். நாட்டு மக்களின் நீண்ட நாளைய விருப்பம் அது. அயோத்தியில் இந்தியர்கள் அனைவரின் ஒப்புதலுடனேயே ராமர் கோயில் கட்டப்படுகிறது. பாபர் மசூதி பூட்டை திறந்து விட்டவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரே அப்போது நடந்த பூமி பூஜைக்கு அனுமதி வழங்கினா்ர.
» கேரளாவில் இன்று 1,725 பேருக்குப் புதிதாகக் கரோனா: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்
» காஷ்மீரில் பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்; 11,517 கி.மீ சாலைகள் அமைக்கும் திட்டம் நிறைவு
இந்தியர் ஒவ்வொருவரின் நம்பிக்கையின் மையப்புள்ளியாக ராமர் கருதப்படுகிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராமர் கோயில் கட்டுவதை வரவேற்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விருபியதாகவும் கூறினார்.
இந்தநிலையில் பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இதுகுறித்து கூறியதாவது:
பாபர் மசூதியின் பூட்டை திறந்து விட்டு ராமர் கோயில் பூமி பூஜை நடக்க முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுத்தாக கமல் நாத் கூறுகிறார், ஆனால் சசிதரூர் இதனை மறுக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பாபர் மசூதியின் பூட்டை திறந்து விட்டாரா என்ற தெளிவு காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கே இல்லை. தங்கள் தலைவர் என்ன செய்தார், செய்வில்லை என்பது காங்கிரஸுக்கே தெரியவில்லை.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago