கேரளாவில் புதிதாக 1,725 பேருக்குக் கரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''கரோனா தொற்று காரணமாக 13 இறப்புகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கீஸ் (90), ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கே ஜி சந்திரன் (75), ராஜம் எஸ் பிள்ளை (76) , கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சு (69); காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்மா (38), அப்பாஸ் (55), ரமேசன் (47), மரியம்மா (75), ரிசா பாத்திமா (7 மாதங்கள்), திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரியன் டைட்டஸ் (42), செல்வராஜ் (58), சிலுவம்மா (75), மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சவா ஹாஜி (65) ஆகியோர் உயிரிழந்தவர்கள். கரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை இப்போது 169 ஆகும். ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் சோதனைகளுக்குப் பிறகு மேலும் இறப்புகள் உறுதி செய்யப்படும்.
மாவட்ட வாரியாகத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்கள்:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 461, மலப்புரம் மாவட்டத்தில் 306, திருச்சூர் மாவட்டத்தில் 156, ஆலப்புழா மாவட்டத்தில் 139, பாலக்காடு மாவட்டத்தில் 137, எர்ணாகுளம் மாவட்டத்தில் 129, காசராகோடு மாவட்டத்தில் 97, கோட்டயம் மாவட்டத்தில் 89, கண்ணூர் மாவட்டத்தில் 77 , கொல்லம் மாவட்டத்தில் 48, கோழிக்கோடு மாவட்டத்தில் 46, இடுக்கி மாவட்டத்தில் 23, வயநாடு மாவட்டத்தில் 15, பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர்.
» காஷ்மீரில் பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்; 11,517 கி.மீ சாலைகள் அமைக்கும் திட்டம் நிறைவு
» கரோனா தொற்று; நாள்தோறும் 10 லட்சம் பரிசோதனைகள் செய்ய இலக்கு
தொடர்பு மூலம் மாவட்ட வாரியாகத் தொற்று காணப்பட்டவர்கள்:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 435, மலப்புரம் மாவட்டத்தில் 285, திருச்சூர் மாவட்டத்தில் 144, பாலக்காடு மாவட்டத்தில் 124, எர்ணாகுளம் மாவட்டத்தில் 123, ஆலப்புழா மாவட்டத்தில் 122, காசர்கோடு மாவட்டத்தில் 90, கோட்டயம் மாவட்டத்தில் 81, கண்ணூர் மாவட்டத்தில் 61, கொல்லம் மாவட்டத்தில் 45, கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 33, இடுகி மாவட்டத்தைச் சேர்ந்த 14, வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 13, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர்.
இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 31 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர் - திருவனந்தபுரம் மாவட்டத்தில் 15, கண்ணூர் மாவட்டத்தில் 5, திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தலா 3, கோழிக்கோடு மாவட்டத்தில் 2 மற்றும் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் காசராகோடு மாவட்டங்களில் தலா ஒருவர். கண்ணூர் மாவட்டத்தில் இரண்டு டி.எஸ்.சி பணியாளர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சையில் இருந்து இன்று நெகட்டிவ் ரிசல்ட் பெறப்பட்டு குணமானவர்கள்:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 270, காசர்கோடு மாவட்டத்தில் 170, மலப்புரம் மாவட்டத்தில் 130, ஆலப்புழா மாவட்டத்தில் 110, கொல்லம் மாவட்டத்தில் 89, கோழிக்கோடு மாவட்டத்தில் 76, எர்ணாகுளம் மாவட்டத்தில் 63, பாலக்காடு மாவட்டத்தில் 53, கோட்டயம் மாவட்டத்தில் 46, திருச்சூர் மாவட்டத்தில் 42, பத்தனம்திட்டா மாவட்டத்தில் 32, கண்ணூர் மாவட்டத்தில் 22, இடுகி மாவட்டத்தில் 15, வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர்.
தற்போது 15,890 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 30,029 பேர் தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,64,029 நபர்கள், வீடு அல்லது நிறுவன தனிமைப் படுத்தலின் கீழ் 1,50,332 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 13,697 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1,455 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 26,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக மொத்தம் 12,05,759 மாதிரிகள் இதுவரை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, 1,49,766 மாதிரிகள் முன்னுரிமை குழுக்களிடமிருந்து வந்தன.
24 புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன, 21 இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 571 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அமைச்சர் சைலஜா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago