நாடுமுழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான நல்வாழ்வு மையங்கள்; கரோனா காலத்தில் கிராமங்களுக்கு பேருதவி: முக்தா் அப்பாஸ் நக்வி பெருமிதம்

By செய்திப்பிரிவு

இந்தியர்களுக்கு பெருந்தொற்றுப் பேரிடரானது பராமரிப்பு, அக்கறை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான காலகட்டமாக இருந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதோடு உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் இது ஒரு முன்னுதாரணம் ஆகும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்தார்.

சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதிக்கழகமானது (NMDFC) புதுதில்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு வழங்கி உள்ள நவீன சுகாதார பராமரிப்பு வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனையைக் கொடியசைத்து வைத்துப் பேசிய நக்வி ‘‘மக்களின் வாழ்க்கை முறையிலும் பணிசார்ந்த கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டார். மக்கள் இப்போது சமுதாயத்திற்கு சேவையாற்றுதல் மற்றும் பொறுப்பேற்றல் ஆகியவற்றில் கூடுதலான கடமையை நிறைவேற்றுகிறார்கள்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தின் மனஉறுதியும், மக்களின் இரக்க மனோபாவமும் இணைந்து இந்தியாவில் சுகாதாரப் பிரிவில் சுயசார்பு நிலையை விரைவாக அடைய வழிவகுத்து உள்ளன. என்-95 முகக்கவசங்கள், பிபிஇ, வென்ட்டிலேட்டர்கள் மற்றும் இதர உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சுயசார்பை அடைந்துள்ளதோடு, பிற நாடுகளுக்கும் உதவிகளைப் புரிந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

நமது நாட்டில் கரோனா பரிசோதனைக்கு முன்னர் ஒரே ஒரு பரிசோதனைக் கூடம் மட்டுமே இருந்தது என்று தெரிவித்த நக்வி இன்று நாட்டின் அனைத்து இடங்களிலும் 1400 பரிசோதனைக் கூடங்களின் வலைப்பின்னல் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார். கரோனா தொற்றின் ஆரம்ப நெருக்கடி காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 300 பரிசோதனைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டன. ஆனால், குறுகிய காலகட்டத்திலேயே இன்று நாம் ஒரு நாளைக்கு 7,00,000 பரிசோதனைகளை செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

‘‘தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வாரு இந்தியருக்கும் சுகாதார ஐடி தரப்படும். இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கமானது இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும். தனிநபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிசோதனைகள், அவருக்கு வந்த அனைத்து நோய்கள், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், அறிக்கைகள் என இத்தகைய அனைத்து தகவல்களும் இந்த ஒரே ஆரோக்கிய ஐடியில் இடம் பெற்றிருக்கும்’’ என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘‘உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பராமரிப்பு திட்டமான மோடி கேர் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிப்பதாக உள்ளது. மோடி கேர் நாட்டின் மக்கள் தொகையில் 40% நபர்களுக்கு பலன் அளிப்பதாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவில் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மிகப் பெரும் மக்கள் தொகை என்ற தடையைத் தாண்டியும் கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளை மிகப் பெரிய அளவில் இந்தியா வெற்றிகரமாகத் தடுப்பதற்கு உதவி உள்ளது’’ என்று நக்வி குறிப்பிட்டார்.

சுகாதார வசதிகளை நவீனப்படுத்த அரசு தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது என்று நக்வி தெரிவித்தார். 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன, 5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு கூடுதலாக 45,000 மாணவர்கள் படிப்பதற்கு வழி ஏற்பட்டு உள்ளது, கிராமங்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ”நல்வாழ்வு மையங்கள்” தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நல்வாழ்வு மையங்கள்தான் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கிராமங்களுக்கு பேருதவியாக இருந்தன என நக்வி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்