ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தின் செயல் திறனும், பாதுகாப்பும்தான் கவலைக்குரியது: நோபல் பரிசு விஞ்ஞானி கருத்து

By பிடிஐ

ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த மருந்தின் செயல்பாட்டுத் திறன், பாதுகாப்புப் பற்றி யாருக்கும் தெரியாது. நம்முடைய சந்தேகம் உறுதியானால் மற்ற தடுப்பு மருந்துகளையும் மறுக்க வேண்டியது வரும் என்று நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கரோனா வைரஸுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உருவாக்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. அந்த தடுப்பு மருந்து உடலில் நிலையான எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி வருவதாகவும், திறன்மிக்க வகையில் கரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்கு செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தை செலுத்தினார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.

இந்த சூழலில் 1996-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற மருத்துவ விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள மைக்ரோபயாலாஜி மற்றும் நோய்தடுப்புவியல் பிரிவில் பீட்டர் டோஹர்டி பணியாற்றி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் கவலைக்குரிய அம்சமே அதன் பாதுகாப்பும், செயல்பாட்டுத் திறனும்தான். ஒருவேளே நாம் சந்தேகப்படும்வகையில் அமைந்தால், இந்த தடுப்பு மருந்தை மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகளையும் நாம் மறுக்க வேண்டியதுவரும்.

ஆனால், கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் குறைந்தவிலையில் மருந்துகளை வழங்கும் அம்சத்தில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. ஆதலால், கரோனா தடுப்பு மருந்துக்கான சந்தையில் இந்தியாவின் பங்கு எதிர்காலத்தில் மிகப்பெரியதாக அமையும். இவைஅனைத்துமே உலகத்தின் பொருளாதாரம் விரைவாக இயல்புநிலைக்கு வரவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.

ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து எவ்வாறு கிளினிக்கல் பரிசோதனைக்கு வராமலே கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பட்டது, மருந்தின் பாதுகாப்பு , செயல்திறன் என்ன என்பது பற்றித்தான் இப்போது இருக்கும் கவலை.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் சார்பிலும் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

தற்போதுமுதல் கிளினிக்கல் பரிசோதனை முடிந்து, 2-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறது. நாங்கள் இந்த மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஏழை நாடுகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை அளித்து வழங்க உள்ளோம்.

இவ்வாறு டோஹெர்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்