பிஹாரில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளது.
பிஹாரில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,01,906 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 500யை தாண்டியுள்ளது. அங்கு 36,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 லட்சம் கரோனா பாதிப்புகளைத் தாண்டிய 8-வது மாநிலம் பிஹார் உள்ளது. இதனையடுத்து ஊரடங்கை செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் முன்னதாக ஆகஸ்ட் 16-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வி நிறுவனங்கள் மூடப்படும். அரசியல், சமூக, ஆன்மீக கூட்டங்களுக்கு தடை தொடரும். கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடரும். அதேசமயம் கடைகள் திறந்து வழக்கம்போல் வர்த்தகர்கள் வணிகம் செய்யலாம். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருக்கும் என பிஹார் அரசு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago