ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த வரைவு நெறிமுறை வெளியீடு

By செய்திப்பிரிவு

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அவ்வப்போது ஒப்பந்த முறையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு தற்போது வரை எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் பிரச்சினைகள் எழுந்து வருகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில், இதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினங்கள் துறை நேற்று வெளியிட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்களாவன:

ஒப்பந்த முறையில் மீண்டும் பணியமர்த்தப்படும் மத்திய அரசு ஊழியருக்கு, அவர் ஓய்வுபெறும் போது பெற்ற சம்பளத்தில் இருந்து தற்போதைய ஓய்வூதியத்தை கழித்தால் கிடைக்கும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டும்.

மீண்டும் பணியமர்த்தப்படுபவர்கள் ஓய்வுபெற்று 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஓராண்டு வரைதான் பணியில் இருக்க வேண்டும். பின்னர், அவரது திறனைப் பொறுத்து 2 ஆண்டுகள் வரை அது நீட்டிக்கப்படலாம் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரைவு நெறிமுறைகள் தொடர்பாக 10 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்