கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் நேற்று அமலாக்கப்பிரிவினர் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த ஜூன் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.
இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
தங்கக் கடத்தில் வழக்கு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத்துறையினரும், என்ஐஏ அமைப்பினரும் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்தவழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே முக்கியக் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் ஆகிய மூவரையும் அமலாக்கப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் மூத்த ஐஏஎஸ்அதிகாரி சிவசங்கருக்கு சம்மன் அனுப்பி நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று பிற்பகலில் விசாரணைக்குச் சென்ற சிவசங்கரிடம் ஏறக்குறைய 5 மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடந்தது, இரவில்தான் விசாரணையிலிருந்து சிவசங்கர் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவினர் சிவசங்கர் தொடர்பாக ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் “ தங்கம் கடத்தல்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் குறித்த அனைத்து விஷயங்களையும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் நன்கு அறிந்தவர்.
அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் விவரங்கள் கிடைக்கும். ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில், முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னாவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு செல்வாக்கும், அதிகாரமும் இருந்தது என்று தெரியவந்தது. ஆதலால், சிவசங்கரிடம் விசாரி்க்க வேண்டும்
மேலும், கடந்த 2018-ம் ஆண்டில் கேரளத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களிடம் உதவி கேட்கும் கூட்டம் 2018,அக்டோபர் 17 முதல் 21 ம்தேதிவரை நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிவசங்கருடன் சேர்ந்து ஸ்வப்னா சுரேஷும் பங்கேற்றுள்ளார் என்று என்ஐஏ நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். ” எனத் தெரிவித்தனர்.
அமலாக்கப்பிரிவினர் ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையில், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அமலாக்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்று அமலாக்கப்பிரிவு, சுங்கத்துறை, என்ஐஏ கூட்டாக நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago