ஒவ்வொரு கிராமமும் அடுத்த 1000 நாட்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் (ஓஎஃப்சி) இணைப்புடன் இணைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
74-வது சுதந்திர தின உரையின் போது, அடுத்த 1000 நாட்களில், லட்சத்தீவு, கடல் நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
"நம்மிடம் சுமார் 1,300 தீவுகள் உள்ளன. அவற்றின் புவியியல் இருப்பிடம் மற்றும் தேச வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இந்தத் தீவுகளில் சிலவற்றில் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவான வளர்ச்சிக்காக சில தீவுகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். சமீபத்தில் நாங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஒரு சிறந்த இணையத்திற்காக கடலுக்கடியில் கேபிள் மூலம் இணைத்தோம்.
அடுத்து, நாங்கள் லட்சத்தீவை இணைப்போம்;" என்று அவர் தனது சுதந்திர தின உரையில் செங்கோட்டையில் இருந்து நிகழ்த்தியபோது, தெரிவித்தார். டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள சேவைகளுக்கு இணையாக யூனியன் பிரதேசத்திற்கான (யுடி) அதிவேக அகன்ற கற்றை இணைப்பை உறுதி செய்வதற்காக இந்த வாரத் தொடக்கத்தில் சென்னை மற்றும் அந்தமான், நிக்கோபார் இடையே முதன்முதலில் கடலுக்கடியில் கண்ணாடி இழை இணையக் கேபிள் இணைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
» சீனாவின் பெயரை உச்சரிக்க ஆட்சியாளர்கள் அஞ்சுவது ஏன்?- காங்கிரஸ் சரமாரி கேள்வி
» ‘‘எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு’’- ப.சிதம்பரம்
லட்சத்தீவும் 1,000 நாட்களில் கடலுக்கடியிலான கண்ணாடி இழை இணையக் கேபிளுடன் இணைக்கப்படும் என்றார்.
"வரவிருக்கும் 1000 நாட்களில், நாட்டின் ஒவ்வொரு கிராமமும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்படும் " என்று தெரிவித்தார். 2014-க்கு முன்னர் , நாட்டில் 60 பஞ்சாயத்துகள் மட்டுமே கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருந்ததாக மோடி குறிப்பிட்டார் .
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கிராம் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கு கிராமப்புற இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியாவில் கிராமங்களின் பங்கேற்பும் இந்தியாவில் சமமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
இதனை ஏற்படுத்துவதற்கு நமது கண்ணாடி இழை இணையக் கேபிள் கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்துவோம். இது 1000 நாட்களில், 6 லட்சம் அனைத்து கிராமங்களையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார்..
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முக்கியமான அறிவிப்புக்கு ட்விட்டரில் தமது நன்றியைத் தெரிவித்துள்ள மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இன்று நீங்கள் இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் 1000 நாட்களில் இணைக்கும் பொறுப்பை தொலைத்தொடர்புத் துறையிடம் ஒப்படைத்துள்ளீர்கள்.
இது டிஜிட்டல் இந்தியாவுக்கான செயல்பாட்டையே மாற்றியமைப்பதாகும்; உங்களது உத்வேகத்துடன் நாங்கள் அதை செயல்படுத்துவோம்”
லட்சத்தீவு தீவுகளில் அதிவேக இணைய சேவைகளுக்கான அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த .பிரசாத் , இந்த தீவுகளுக்கு நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணையக் கேபிள் இணைப்பை வழங்க 1000 நாட்கள் என்ற இலக்கை இன்று பிரதமர் நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் . அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இணைப்பது போல, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்பு துறை, இதனை விரைவாகவும், சிறப்பாகவும் கண்காணிக்கும் என்றார்.
கிராமங்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் இணைப்பு மற்றும் லட்சத் தீவுகளுக்கு கண்ணாடி இழை இணையக் கேபிள் இணைப்பு ஏற்படுத்துவதால் ஊரகப்பகுதிகள், கிராமங்களில் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும், லட்சத் தீவுகளில் உள்ளவர்களுக்கு மலிவான மற்றும் சிறந்த இணைப்பும், டிஜிட்டல் இந்தியாவின் அனைத்து பயன்களும் கிடைக்கும். குறிப்பாக, இணையவழிக் கல்வியை மேம்படுத்துவதையும்,
மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிப்பது, வங்கி அமைப்பு இணையவழி வர்த்தகம், சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றையும் பெற முடியும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago