நாட்டின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, பிரதமர், முதல்வர்கள் தேசியக் கொடியேற்றி உரையாற்றினர். இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று கொடியேற்றி பேசிய போது வளர்ச்சியைத் தாரக மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசை கட்டமைப்பதே குறிக்கோள் என்று பேசியதோடு மாநில மக்கள் கரோனா வைரஸைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றார்.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 79,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 104 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,717 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய எடியூரப்பா, “நமது நோக்கம் கல்யாண ராஜ்ஜியத்தை (ஷேமநல அரசு) கட்டமைப்பதே, வளர்ச்சியே இதன் தாரக மந்திரம்.
உலக தொற்று நோயை எதிர்த்து போராடும் அதே வேளையில், மகாத்மா காந்தி கண்ட கனவான ராமராஜ்ஜித்தை நோக்கி பெரிய அளவில் அடியெடுத்து வைத்துள்ளோம். ராஜதர்மத்தை அதன் உண்மையான நோக்கத்துடன் கடைப்பிடிப்போம்.
நமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து மாநில மக்களின் ஷேமநலத்தை மனதில் கொண்டு மக்கள் ஆதரவு முடிவுகள் பலவற்றை எடுத்துள்ளோம். அரசு எடுத்துள்ள முடிவுக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்கின்றனர். இதற்காக நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன்.
கரோனா வைரஸ் என்னையும் தொற்றியது, முழுதும் தற்போது குணமடைந்து விட்டேன். ஆகவே கரோனா வைரஸ் தொற்று குறித்து
மக்கள் கவலைப்பட வேண்டாம். பயப்பட வேண்டாம்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அமைதி, நிவாரணம், சமாதானம் ஆகியவற்றை உறுதி செய்யும் பல திட்டங்களை நம் அரசு அமல்படுத்தியுள்ளது.
தொழிற்துறை வசதி நல்குதல் சட்டம் மூலம் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் கர்நாடாகவில் வர்த்தகம் செய்யும் சூழலை எளிதாக்கியுள்ளோம், இதோடு மட்டுமல்லாமல் மாநில இளைஞர்கள் திறன் மேம்பாட்டுக்கும் பணியாற்றியுள்ளோம்.
மேலும் தொழிஸ்சாலைகளுக்காக விவசாய நிலங்கள் வாங்கும் விதிமுறைகளை எளிதாக்கியுள்ளோம். நேரடியாக நிலம் வாங்குவதன் மூலம் தொழிலதிபர்கள், விவசாயிகள் இருவருக்கும் சாதகம் செய்துள்ளோம்.
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை தங்கள் தெரிவுக்குரிய ச்னதையில் விற்க அனுமதிக்குமாறு கூட்டுறவுத்துறையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளோம்.” என்று பேசிய எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை ராமர் கோயிலுக்காக பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago