டெல்லியில் நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சிறப்பு ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கோவிட் – 19 தொற்றை கருத்தில் கொண்டு டெல்லி செங்கோட்டையில் நாளை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

பாதுகாப்பு அமைச்சகம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொடி ஏற்றுதல் விழாவில் தேசிய செயல்பாட்டின் புனிதத்திற்கும் கவுரவத்திற்கும் இடையிலான சமநிலையை காக்கும், அதே நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய் தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

· எந்தவொரு கூட்டத்திற்கும் குறைந்த வாய்ப்புகளுடன் தடையற்ற இயக்கத்தை எளிதாக்கும் பொருட்டு, மரத்தாலான தரையையும் தரைவிரிப்புகளையும் கொண்டு இருக்கைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையைத் தவிர்ப்பதற்கும், அனைத்து அழைப்பாளர்களும் சுமுகமாக செல்வதை உறுதி செய்வதற்கும் போதுமான இடைவெளி அடையாளங்களுடன் கூடுதல் கதவு பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனங்கள் சீராக நுழைவதற்கும், வெளியேறுவதை உறுதி செய்வதற்கும் பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்கள் செங்கல் நடைபாதைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

· கவுரவக் குழுவின் உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

· இருக்கைக்கான வழிகாட்டும் கொள்கை “இரண்டடி இடைவெளி” அல்லது நிகழ்வின் போது அமர்ந்திருக்கும் இரண்டு விருந்தினர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி, நிகழ்ச்சி நடக்கும் போது கடைப்பிடிக்கப்படும்.

· விழா அழைப்பின் மூலம் மட்டுமே பங்கேற்க முடியும். முறையான அழைப்புகள் இல்லாத உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிகாரிகள், தூதர்கள், பொது உறுப்பினர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்களுக்கு சுமார் 4000க்கும் கூடுதலான அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

· பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, என்.சி.சி பயிற்சி மாணவர்கள் இந்த நிகழ்வைக் காண அழைக்கப்பட்டுள்ளனர் (இளம் பள்ளி குழந்தைகளுக்கு பதிலாக) அவர்கள் ஞான்பாத்தில் அமர்ந்திருப்பார்கள்.

· கோவிட் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அழைப்பாளர்களுக்கு உணர்த்துவதற்காக, ஒவ்வொரு அழைப்பிதழ் அட்டையுடனும் கோவிட் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான குறிப்பிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

· விழாவிற்கான பயிற்சிகள், சமூக விலகல் விதிமுறைகள் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற உள்ளன.

· நான்கு இடங்களில் போதுமான மருத்துவப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராம்பார்ட்டுக்கு அருகில் 1, மாதவதாஸ் பூங்காவில் 1 மற்றும் ஆகஸ்ட்15 பூங்காவில் 2 மையங்கள் உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்குள் உள்நுழைபவர்களுக்கு கோவிட் -19 தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று கண்டறியவும், முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்யவும் இவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு இடங்களிலும் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும்.

· அழைப்பாளர்களுக்கான அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும், வெப்ப அளவுமானி கொண்டு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. செங்கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான சுத்திகரிப்புப் பணி வழக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

· அனைத்து அழைப்பாளர்களும் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதலாக, பல்வேறு இடங்களில் பொருத்தமான முகக்கவசங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

· என்.சி.சி பயிற்சி மாணவர்களுக்கு பின்னால் உள்ள ஞான்பாத்தில் பார்வைக்கு மேலும் அழகூட்டுவதற்காக மலர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்