ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில் பாஜகவுக்கு முன்னதாக காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் சமாதானம் அடைந்து மீண்டும் கட்சிக்கு திரும்பினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியது.
முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்து இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி, சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கான நோட்டீஸை அளித்தார். இதனால் அவையின் முதல் நிகழ்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பாஜக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அமைச்சர் சாந்தி குமார் முன்மொழிந்துள்ளா்ர.
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் அசோக் கெலாட் அரசில் ஒற்றுமையாக இணைந்திருப்பதால், காங்கிரஸ் கட்சியின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்துள்ளது.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு சுயேட்சைகள், கூட்டணி கட்சிகள் என 107 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன.
ஆனால், பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago