இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் 17 லட்சமாக உயர்வு; நோய்தொற்று 24 லட்சமாக அதிகரிப்பு: உயிரிழப்பு 48 ஆயிரத்தைக் கடந்தது

By பிடிஐ


இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது, கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிததாக 64 ஆயிரத்து 553 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 24 லட்சத்து 61 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. தொடரந்து 8-வது நாளாக நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேல் நோய்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தைக் கடந்த நிலையில் ஒரு வாரத்தில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்து, 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடையும் சதவீதம் 71.17 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது 6 லட்சத்துக்கு 61 ஆயிரத்து 595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 26.28 சதவீதமாகும்.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,007 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 48 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் போது உயிரிழப்பு சதவீதம் 1.95 சதவீதமாகக் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 413 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக தமிழகத்தில் 119 பேர், கர்நாடகாவில் 103 பேர், ஆந்திராவில் 82 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 52 பேர், உத்தரப்பிரதேசத்தில் 50பேர், பஞ்சாப்பில் 31 பேர், குஜராத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசத்தில் 17 பேர், டெல்லியில் 14 பேர், ஜார்க்கண்டில் 12 பேர், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானில் தலா 11 பேர், பிஹாரில் 10 பேர், ஒடிசா, தெலங்கானாவில் தலா 9 பேர் உயிரிழந்தனர்.

அசாம், ஹரியாணாவில் தலா 8 பேர், புதுச்சேரியில் 6 பேர், சத்தீஸ்கரில் 5 பேர், கேரளா, உத்தரகாண்டில் தலா 3 பேர், கோவா, திரிபுராவில் தலா 2 பேர், அருணாச்சலப்பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், சண்டிகர், இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின் படி நாட்டில் இதுவரை 2.76 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 8,48,728 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 413 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19 ஆயிரத்து 063 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 60ஆயிரத்து 105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 119 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,167 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 210 பேர் சிகிச்சையில் உள்ளனர். 18 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,731 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 78,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 103 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,613 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 13,891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்