மருந்து பெயரை பெரிய எழுத்தில் எழுத வேண்டும்: டாக்டர்களுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பெரும்பாலான டாக்டர்கள், மருந்துகளின் பெயர்களை தெளிவாக எழுதுவதில்லை. அவர்களின் கையெழுத்து கிறுக்கலாக உள்ளது என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணா படா மண்டல் என்பவர் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், எனது மனைவியை சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்த மருந்துகளின் பெயர்கள் தெளிவாக இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பனிகிராகி தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மருந்து சீட்டு, பிரேதப் பரிசோதனை அறிக்கை, காயங்கள் குறித்த பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை டாக்டர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும். குறிப்பாக நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் பெயர்களை தெளிவான கையெழுத்தில், பெரிய எழுத்தில் எழுத வேண்டும். இது டிஜிட்டல் உலகம்.

எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக மருந்துகளின் தெளிவான அச்சுப் பிரதியை நோயாளிகளுக்கு வழங்கலாம். இதுதொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்