கரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியான சரிவாக, உயிரிழப்பு விகிதம் 1.96% ஆக குறைந்து வருகிறது.

கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 56,383 பேர் குணமடைந்துள்ளனர் என்ற ஒரே நாள் உச்சத்தை இந்தியா தொட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன், மொத்தமாக மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று கிட்டத்தட்ட 17 லட்சத்தை (16,95,982) நெருங்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த, கவனமிக்க மற்றும் கூட்டுமுயற்சிகளுடனும், லட்சக்கணக்கான முன்களப் பணியாளர்களின் ஆதரவுடனும் கோவிட் சோதனை பெருமளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளது. விரிவான கண்காணிப்புடனும், தொடர் நடவடிக்கைகள் மூலமாகவும் திறமையாக சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடல், கடுமையாகவும், மோசமாகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மத்திய அரசின் அறிவுரையின்படி பயனுள்ள மருத்துவ மேலாண்மையுடன் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்து வருபவர்களின்

எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களது எண்ணிக்கை விகிதம் 70 சதவிகிதத்தை (70.77% இன்று) கடந்துள்ளது. கோவிட் நோயாளிகள் மத்தியில் உயிரிழப்பு விகிதம் 1.96 சதவிகிதமாக குறைந்து வருவதுடன் மேலும் படிப்படியாக சரிந்து வருகிறது.

அதிக அளவில் குணமடைந்து வருவோர் பற்றிய பதிவு, நாட்டின் உண்மையான சம்பவங்களை உறுதி செய்திருப்பதுடன், தற்சமயம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கோவிட் நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த நோயாளிகளில் தற்போது இந்த எண்ணிக்கை 27.27 சதவிகிதமாக குறைந்துள்ளது. குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைவிட (6,53,622) 10 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்