ராஜஸ்தானில் காங்கிரஸில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு சச்சின் பைலட்டும், கெலாட்டும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார். ஆளுநர் மிஸ்ரா ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.
» ‘‘குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்’’ - வரி செலுத்துவோருக்கான புதிய திட்டத்துக்கு அமித் ஷா பாராட்டு
» டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார்.
ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கியது.
ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார். இதனால் சச்சின் பைலட் கட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சச்சின் பைலட் ஜெய்ப்பூர் திரும்பினார். இந்தநிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவரது தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது. இதனையேற்று கொண்டு சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர்.
ஒரு மாதத்திற்கு பிறகு சச்சின் பைலட்டும், கெலாட்டும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.
சச்சின் பைலட்டை அசோக் கெலாட் வரவேற்றார். இருவரும் கைகுலுக்கி கொண்டனர். இதன்பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago