வரி செலுத்துவோருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் மூலம் குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆன்லைன் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் செலுத்தி, வரி செலுத்துவோருக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வரி செலுத்துவோருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் மூலம் குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
» டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
“வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்காக தொடங்கப்பட்டிருக்கும் தளமானது, புதிய இந்தியாவுக்கான முக்கிய நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
“வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல் என்பதற்கான தளம், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வரிசெலுத்துவோருக்கு அளித்த பரிசாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“முகமில்லா மதிப்பீடு, முகமில்லா முறையீடு போன்ற சீர்திருத்தங்களால், இந்தத் தளம் நமது வரிசெலுத்தும் முறையை மேலும் வலுப்படுத்தும்” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
“இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள நேர்மையான வரிசெலுத்துவோரை மதிப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், மோடி அரசு பல்வேறு மைல்கல் முடிவுகளை மேற்கொண்டுள்ளது. “குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இந்தத் தளமாகும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago