திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கிய வரலாறு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக கொடியேற்றத் துடன் தொடங்கியது.

திருமலையில் இவ்விழாவை பல்லவ அரசர்கள் தொடங்கி வைத்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பல அரசர் கள், சக்ரவர்த்திகள், ஜமீன்கள் பிரம்மோற்சவ விழாவை முன் னின்று நடத்தி உள்ளது வரலாற்றில் பதிவாகி உள்ளது.

ஏழுமலையான் உத்தரவின் பேரில் அவர் பிறந்த திருவோணம் நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் நிறைவடையும் வகையில் பிரம்ம தேவன் இந்த விழாவை தொடங்கி வைத்ததாக கருடபுராணம் தெரி விக்கிறது.

இதனால் இவ்விழா பிரம்மோற்சவம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கி.பி. 614-ம் ஆண்டு பல்லவ அரசி பெருந்தேவி, ‘மணவாள பெருமாள்’ என அழைக்கப்படும் போக நிவாச மூர்த்தியின் வெள்ளி உற்சவ விக்ரஹத்தை திருமாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டுசென்று பிரம்மோற்சவம் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து கி.பி. 966-ம் ஆண்டு 10 நாட்கள் வரை பிரம்மோற்சவம் நடை பெற்றுள்ளது.

3, 4-ம் நூற்றாண்டுக்கு பின்னர், தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானத்தை தனியாக நடத்தி உள்ளனர். இந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு 7 முறை பிரம் மோற்சவம் நடத்தப்பட்டுள்ளது. ‘அடி திருநாள்’ பெயரில் கி.பி. 1254-ம் ஆண்டு தெலுங்கு பல்லவ அரசர் விஜயகண்டா கோபால தேவுடு என்பவரும், கி.பி. 1328-ம் ஆண்டு திருபுவண சக்ரவர்த்தி திருவெங்கடநாத யாதவ ராயுலு, ஏழுமலையானின் உற்சவங்களை நடத்தி உள்ளார்.

கி.பி. 1339-ம் ஆண்டில் ‘மலை குனிய நின்ற பெருமாள்’ எனும் பெயரில் உற்சவ மூர்த்தி அழைக்கப்பட்டுள்ளார்.

மாசித் திருநாள் எனும் பெயரில் கி.பி. 1429-ம் ஆண்டு வீர பிரதாப தேவராயுலு எனும் அரசரும், கி.பி.1446-ல் ஹரிஹர ராயுலு எனும் அரசரும் பிரம் மோற்சவத்தை நடத்தி உள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

கி.பி. 1530-ம் ஆண்டு, அச்சுத ராயுலு காலத்தில் பிரம்மோற்சவம் எனும் பெயரில் பெரும் விழாக்கள் நடந்துள்ளன. கி.பி. 1545-ம் ஆண்டில் பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாளான அங்குரார்பணம் நாளன்று ’திருக்கல்யாணங்கள்’ எனும் பெயரில் ஏழுமலையானுக்கு கல்யாண உற்சவங்கள் நடந் துள்ளன.

அங்குரார்பணம் நடைபெறும் நாளில் இருந்து 11-வது நாள் நடத்தப்படும் ஏழுமலையானின் புஷ்ப யாகம், கி.பி. 1446-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக சாசனங்கள் மூலம் அறிய முடிகிறது.

கி.பி. 1583-ம் ஆண்டு மாதந் தோறும் பிரம்மோற்சவம் நடந்துள் ளது. இப்படி பல அரசர்கள், சக்கரவர்த்திகள் பிரம் மோற்சவத்தை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். இதன்படி பல மாற்றங்களுக்கிடையே தற்போது பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடத்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

மேலும்