`வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இந்தியர்கள் 10 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்

By செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை, விமானம் மூலம் தாயகம் அழைத்துவரும் பணி கடந்த மே 7-ம் தேதிதொடங்கி, பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் வஸ்தவா நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பதிவில், “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பிய இந்தியர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள நமது நாட்டினரை தாயகம் அழைத்து வரும் எங்கள் முயற்சியை தொடர்கிறோம். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுராக் வஸ்தவா தனதுட்விட்டர் பதிவுடன் சிவில் விமானபோக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி வெளியிட்ட ட்விட்டர்பதிவையும் இணைத்துள்ளார். அந்தப் பதிவில், `வந்தே பாரத்'திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுபோல் இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். நமது மக்களின் எதிர்பார்ப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணி தொடரும். வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினருக்கான இந்த சேவை தொடரும்” என்று அமைச்சர் கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்