உத்தர பிரதேசதத்தை போலவே பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரை கும்பல் ஒன்று நேற்று இரவு சூறையாடியது., போலீஸ் நிலையம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தி வீடு ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தை அடுத்து பேஸ்புக் போஸ்ட் பகிர்ந்த எம்.எல்.ஏ.உறவினர் நவீன் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி ஆகிய இரு இடங்களில் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காரணம் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன் (23), முகநூலில் ஒரு மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையிலான பதிவு ஒன்றை பகிர்ந்திருந்ததே. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த வன்முறையில் 2 பேர் பலியாக 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் 60 பேர் காயமடைந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
» கேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
» காஷ்மீர் - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம்; பணி தொடக்கம்
நவீனின் போஸ்ட்டைத் தொடர்ந்து ஆத்திரத்துடன் புலிகேசி நகர் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் வீட்டருகே கூடிய கும்பல் வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. கற்களை வீசி ஜன்னல்கள், கதவுகளை உடைத்தனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். முதலில் தடியடி, பிறகு கண்ணீர்ப்புகை அதன் பிறகுதான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி கூறியதாவது:
‘‘பெங்களூருவில் நடந்த கலவரம் திட்டமிட்டே நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு, கற்களை பயன்படுத்தி கலவரம் செய்துள்ளனர். 300 வாகனங்கள் தீயிட்டு கொளுத்துப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விசாரணை முழுமையாக நடந்த பிறகே தெரிய வரும். உத்தர பிரதேசதத்தை போலவே கலவரம் செய்தவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்வோம்.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago