இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 லட்சத்தைக் கடந்தது: 16 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்: உயிரிழப்பு 46 ஆயிரத்தைக் கடந்தது

By பிடிஐ


இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 963 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 834 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 963 பேர் புதிதாக கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 23லட்சத்தைக் கடந்து 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தைக் கடந்த நிலையில் அடுத்த 5 நாட்களில் 3 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் விதத்தில் கரோனாவில் இருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை 16 லட்சத்து 39 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 43 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கரோனா எண்ணிக்கையில் 27.64 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 834 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 46 ஆயிரத்தைக் கடந்து 46 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் தகவலின்படி, இந்தியாவில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரத்து 297 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 7 லட்சத்து 33 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 256 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 118 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,189 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,139ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 24 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,695 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 79,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 86 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,698 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 12,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்